அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-08 12:56 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், வெப்ப அலையால் ஏற்படும் 'ஹீட் ஸ்ட்ரோக்' பிரச்சனைக்காக, சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பாஸ்கர் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புக்கு பலரும் ஆளாகின்றனர். வெப்ப அலை பாதிப்பை சமாளிக்க, முன்னெச்சரிக்கையாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு துவக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில், குளிரூட்டும் சாதன வசதிகள் கொண்ட நான்கு ஐ.சி.யு., மற்றும் ஆறு படுக்கைகள் உள்ளன. அனைத்து அவரச சிகிச்சை பிரிவு மருந்துகள், வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள், பொதுமக்களுக்கு உப்பு, சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்., குடிநீர் வழங்கப்படுகிறது. அனைத்து வகை சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். அதிகரிக்கும் வெப்ப தாக்கம் குறித்து, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவசியமின்றி முதியோர், இணை நோயாளிகள், குழந்தைகள் பகலில் வெளியில் வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News