கொட்டி தீர்த்த கனமழை : 293.10 மில்லி மீட்டர் மழை பதிவு
கரூர் மாவட்டத்தில் 293.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்து ஊரெங்கும் மழைநீராக காட்சி அளித்தது. இதே போல கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்தது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் கரூரில் அதிகபட்சமாக 47 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 25.6 மில்லி மீட்டரும், அணைப்பாலயத்தில் 27.4 மில்லி மீட்டர், க. பரமத்தியில் 44.8 மில்லி மீட்டர், குளித்தலையில் 14.6 மில்லி மீட்டர், தோகை மலையில் 11 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 29 மில்லி மீட்டரும், மாயனூரில் 42 மில்லி மீட்டர், பஞ்ச பட்டியில் 26 மில்லி மீட்டரும், கடவூரில் 8.4 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 10.1 மில்லி மீட்டரும், மயிலம்பட்டியில் 7.2 மில்லி மீட்டர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 293.10 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 24.43 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.