நல்லம்பள்ளியில் கொட்டி தீர்க்கும் கனமழை
நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
Update: 2024-05-19 03:53 GMT
தர்மபுரி மாவட்டத்தில் மே, 17, 18, 19 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையில், நேற்று முன்தினம் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அரூரில், 43 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் ஒட்டு மொத்த சராசரி மழை பொழிவாக, 13.17 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை தொடர்ந்து, பிற்பகல், 2:00 மணியளவில் நல்லம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சிவாடி, ஏலகிரி, அதியமான் கோட்டை, பாலாஜங்மன ஹள்ளி பகுதிகளில் அரை மணி நேரம் கன மழை பெய்தது. மீண்டும் சிறிது நேர இடைவெளியில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பொழிந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.