சங்ககிரியில் தீடிரென பெய்த கனமழை
சங்ககிரியில் திடீரென பெய்த கனமழை வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-21 10:07 GMT
கோப்பு படம்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி சுற்றுவட்டார பகுதிகளான செட்டிப்பட்டி,குள்ளம்பட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூர், பெரமச்சிபாளையம், ஒடச்சக்கரை,ஒக்கிலிப்பட்டி, தண்ணீர்தாசனூர்,
மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது இதனை அடுத்து மதிய வேளையில் திடீரென காற்று, இடி,மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் நேற்று இரவு பெய்த கனமழையால் அரசிராமணி பகுதிகளில் 38.6 மி.மீ.மழை அளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.