பலத்த மழை: போலீஸ் குடியிருப்பில் புகுந்த வெள்ளம்

ஆலங்குளத்தில் பெய்த பலத்த மழையில் போலீஸ் குடியிருப்பில் வெள்ளம் புகுந்தது.;

Update: 2024-05-11 13:51 GMT
பலத்த மழை: போலீஸ் குடியிருப்பில் புகுந்த வெள்ளம்

ஆலங்குளத்தில் பெய்த பலத்த மழையில் போலீஸ் குடியிருப்பில் வெள்ளம் புகுந்தது.


  • whatsapp icon
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பலத்த கோடை மழை பெய்தது. ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த நிலையில் சுமாா் 1 மணிக்குப் பின்னா் லேசான தூரலுடன் ஆரம்பித்த மழை, இடி மின்னலுடன் கனமழையாக மாறியது. சாலை, ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நான்குவழிச்சாலைப் பணிகள் காரணமாக தாழ்வான பகுதியாக மாறி விட்ட காவல் நிலையம் அருகில் உள்ள காவலா் குடியிருப்பில் வெள்ள நீா் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாயினா்.
Tags:    

Similar News