காஞ்சியில் கனமழை - கழிவுநீருடன் மழைநீர் கலந்ததால் துர்நாற்றம்

Update: 2023-11-07 04:37 GMT

சாலையில் தேங்கிய மழைநீர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சில நாட்களாக குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பொழிந்த நிலையில், மாவட்டம் முழுதும் நேற்று கனமழை பெய்தது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என அனைத்து பகுதிகளிலும், நேற்று, அவ்வப்போது கன மழை பெய்தது. காஞ்சிபுரம் நகரில், காமராஜர் சாலை, காந்தி ரோடு, ரங்கசாமிகுளம், விளக்கடி கோவில் தெரு, கீரை மண்டபம், மூங்கில் மண்டபம் ஆகிய பகுதிகளில், பாதாள சாக்கடை கழிவுநீருடன், மழைநீர் கலந்து ஓடியதால், துர்நாற்றம் வீசியது. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், கழிவுநீருடன் மழைநீர் கலந்து வெளியேறுகிறது. கனமழை பெய்ததால், நகரின் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் 5.6 செ.மீ., ஸ்ரீபெரும்புதுாரில் 3.2 செ.மீ., குன்றத்துார் 3 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 1.7 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.
Tags:    

Similar News