மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் இன்று மாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாகுபடி பாதிப்படைந்தது.

Update: 2024-05-20 14:33 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் இன்று மாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாகுபடி பாதிப்படைந்தது.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மேகங்கள் புடைசூழ இருண்டு காணப்பட்டதுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக வெளுத்து வாங்கத் தொடங்கியது.சில மணி நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தனிந்ததால் பொதமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் கோடைக்கால சாகுபடியான எள்,உளுந்து, பச்சைப்பயிர் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். கோடைகால பயிர்கள் தற்போது பூ மற்றும் காய்கள் வைக்கும் நிலையில் உள்ளது.இந்த பயிர்கள் அதிக தண்ணீரை தாக்கு பிடிக்க முடியாததால் சாகுபடி அழிந்து விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இயற்கையின் கோரத்தாண்டவம் ஒரு பக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News