கடும் பனிப்பொழிவு; முல்லைப் பூ சாகுபடி பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப் பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-02 04:32 GMT

வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் முல்லைப் பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வேதாரண்யம் கடின வயல் ஆதனூர் கருப்பபுலம் ஆயக்காரன்குளம் மருதூர் நெய் விளக்கு உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் 6000 ஏக்கர் முல்லை பூ சாகுபடி நடைபெற்று வருகிறது சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த முல்லை பூ சாகுபடி இந்த ஆண்டு கடும் பணி பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் சாகுபடி அணிந்து உள்ளன சுமார் 10,000 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளன ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த முல்லை பூ சீசன் காலமாகும் இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லை பூ பட்டுக்கோட்டை. திருவாரூர் . தஞ்சை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்பொழுது கடும் பணி பொழிவால் பூ உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இதனால் நாள் ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு டன் முதல் இரண்டு டன் பூ மட்டுமே வெளி ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது சீசன் காலத்தில் கிலோ ரூபாய் 50 மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது நவம்பர் முதல் பிப்ரவரி அரை கிலோ 200 முதல் 1000 வரை விற்பனை ஆகிறது முல்லைப்பூ ஆயுத பூஜை தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே கிலோ 1000க்கு விற்பனை ஆகும்இந்த ஆண்டு பனிப்பொழிவாள்பூ விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்

Tags:    

Similar News