பாலுசெட்டிசத்திரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு

பாலுசெட்டிசத்திரத்தில் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2024-01-23 15:57 GMT

தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கண்காணிக்கும் பொருட்டு சிறப்பு செயலாக்க திட்ட நிகழ்ச்சி பாலுசெட்டிசத்திரத்தில் நடந்தது.

இதில், காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன் ஆகியோர் இணைந்து அவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து, 'ஹெல்மெட்' அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

Advertisement

தலை காயத்தினால்தான் 90 சதவீதம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார மையம் அறிவிக்கையின்படி தலைக்கவசம் அணிவதால் 70 சதவீதம் படுகாயம் மற்றும் 30 சதவீதம் உயிரழப்பையும் தடுக்கலாம் என, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன ஓட்டிகளிடம் விளக்கினார். தலைகவசம் அணியாத ஓட்டுனர்களுக்கு தணிக்கை அறிக்கை வாயிலாக அபராதம் விதிக்கப்பட்டடது.

தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்கினர்."

Tags:    

Similar News