ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீசார் எச்சரித்து அனுப்பினார்.

Update: 2024-05-27 04:49 GMT

ஹெல்மெட் விழிப்புணர்வு 

கள்ளக்குறிச்சியில் பைக்கில் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை. இதையொட்டி, கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், கனகவள்ளி ஆகியோர் கோட்டைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் சென்ற 30க்கும் மேற்பட்ட பைக்குகளை நிறுத்தி, திடீரென நடைபெறும் விபத்துகளின் போது உயிரை பாதுகாக்க ெஹல்மெட் அணிவது அவசியம். இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுடன் பைக்கில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

குடி போதையிலும், மொபைல் போன் பேசியபடியும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்ட கூடாது என்று அறிவுரை வழங்கினர். மேலும், இனி ஹல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News