குவைத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவி: ஜி கே வாசன்

குவைத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று ஜி கே வாசன் வலியுறுத்தியுள்ளர்.;

Update: 2024-06-13 10:14 GMT
குவைத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவி: ஜி கே வாசன்

ஜி.கே வாசன்

  • whatsapp icon

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குவைத் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கிய 2 தமிழர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

கேரளாவைச் சேர்ந்த இருவரும் இந்த தீ விபத்தில் சிக்கி பலியாகி இருக்கின்றனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு குவைத்தில் உயிரிழந்த தமிழர்களை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தக்க உதவிகள் செய்திட வேண்டும். மேலும் காயமடைந்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு தீவிர மருத்துவ சிசிக்கை அளிக்கவும்,

அவர்கள் விரைவில் குணமடையவும் குவைத் அரசு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு குவைத் அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Tags:    

Similar News