கடனுக்கு அதிக வட்டி - பெண் தற்கொலை

கொல்லங்கோடு அருகே வாங்கிய கடனுக்கு அதிக வட்டியுடன் பணம் கேட்டதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-17 07:45 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே தோணிவளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வதாஸி.வீட்டின் அருகே உள்ள சேசடிமை என்பவரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி இருந்தார்.இந்த பணத்தை திருப்பி கொடுத்த போது செல்வதாஸி கடனாக வாங்கிய பணத்தை விட அதிகமாக சேசடிமை கேட்டதாக கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வதாஸி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் செல்வதாசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News