உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது - ஆட்சியர்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டம் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-06-12 08:32 GMT

ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா  

மூவலூர் இராமாமிர்தம் அம்பையார் நினைவு உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் RTE மூலமாக 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்று மாணலியர், தொடர்ந்து 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் சேர்ந்து பயின்ற மாணவிகளுக்கும் இளங்கலை மற்றும் அறிவியல், தொழில் நுட்ப கல்வி, பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், டிப்ளமா, ஐடிஐ, ஆரம்பக் கல்வியில் பட்டயப்படிப்பு, சட்டம், விவசாயம் சார்ந்த படிப்புகளை கல்லூரியில் பயில்பவர்களுக்கு கல்லூரி வாயிலாக விண்ணப்பித்து முதல் உயர்கல்வி படிப்பதற்கு மாதாமாதம் ரூ.1000/- இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 2024-2025 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவியர் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படும். அஞ்சலகவழிக் கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற இயலாது. வேறு திட்டங்களில் கீழ் நிதியுதவி பெறும் மாணவியரும் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலும். எனவே, பள்ளிபடிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வி பயில் கல்லூரிகளில் சேர்ந்து இத்திட்டத்தில் பயர்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News