பேராவூரணியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி 

பேராவூரணியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-05-25 16:08 GMT

பேராவூரணியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனம் மஹால் திருமண மண்டபத்தில், நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை, அக்னி சாய் எண்டர்பிரைசஸ், நேசன் நேச்சுரல்ஸ் இணைந்து 10, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்விக்குழு தலைவர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தெட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

கடல்சார் பொறியியல் அலுவலர் கலைமணி கலந்து கொண்டு, "மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும், உயர்கல்வியை தேர்வு செய்வதில் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டும். பெற்றோர்கள் வற்புறுத்தலுக்காக இல்லாமல் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, கவனமுடன் படிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார். அக்னிசாய் எண்டர்பிரைசஸ் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News