கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க இந்து மகா சபா கோரிக்கை

மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் திருப்பணிகளை விரைந்து முடிக்க அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-02-13 16:31 GMT
மனு அளிப்பு 

அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் திருப்பணி செய்ய வலியுறுத்தல் அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில், வழிக்கரையான் கோயில் கும்பாபிஷேகம் இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கோயில் திருப்பணி வேலைகள் முழுமையடையாமல் உள்ளது பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். இதேபோல் மணல்மேடு ராதாநல்லூர் சக்தி விநாயகர் கோயில், குத்தாலம் தேரழந்தூரு; வேதபுரீஸ்வரர் கோயில்,

திருவாளபுத்தூர் ரத்தினபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது. எனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் திருப்பணி வேலைகளை முழுவீச்சில் செய்து முடித்து கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனுகொடுப்பதற்காக ராமநிரஞ்சன் தலைமையில் தாரை, தப்பட்டையுடன் பொறுப்பாளர்கள் மணிமாறன், சத்தியமூர்த்தி, விக்னேஷ், ராமகிருஷ்ணன் அஜிஸ்வர்மா ஆகியோர் ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News