போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

தர்மபுரி 4 ரோடு பகுதியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தினத்தை ஒட்டி, மனித சங்கிலி நடந்தது.

Update: 2024-06-27 00:53 GMT

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தினத்தை ஒட்டி தருமபுரி நான்கு ரோட்டில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் சுமார் ஒரு கிலோ தூரத்திற்கு மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்பொழுது கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்த வேண்டாம், போதை பொருள் உன்னை அழித்துவிடும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித செங்கலில் நின்றிருந்தனர். மேலும் மனித சங்கிலியில் கலந்து கொண்ட அனைவரும், போதைப் பொருள் தவிர், போதை உனக்கு அழிவை தரும், போதையில்லா வாழ்வே வரம் என போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இந்த போதைப் பொருள் தடிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மன நல மருத்துவர் கோகுல் மற்றும் கல்லுரி மாணவர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News