நாமக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு!

நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், டிஎல்எஸ். காளியப்பன், உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-12-05 12:46 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9- ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் (05.12.2025) அனுசரிக்கப்பட்டது. இதனைஒட்டி, நாமக்கல் நகர அதிமுக சார்பில் நாமக்கல் பிரதான சாலை பகுதியில், அக்கட்சியின் நகர அலுவலகம் எதிரில் உள்ள பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகளுக்கு அருகே, அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு, அதிமுக நாமக்கல் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், டிஎல்எஸ். காளியப்பன், உள்ளிட்டோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டு, முன்னாள் முதல்வரின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

Similar News