பேரணாம்பட்டு அருகே மனுநீதி நாள் முகாம்
பேரணாம்பட்டு அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பேரணாம்பட்டு அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், சின்ன தாமல் செருவு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், 151 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், சின்ன தாமல் செருவு மற்றும் கொத்தப்பல்லி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் சின்ன தாமல் செருவு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன், தலைமையில் நடைபெற்றது. இம்மனுநீதி நாள் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, கூட்டுறவுத்துறை, பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிகழ்ச்சியில் சின்ன தாமல் செருவு கிராமத்தில் ஏற்கனவே பெறப்பட்ட 249 மனுக்களில் 151 மனுக்கள் ஏற்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பெறப்பட்ட மனுக்களில் 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 70 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. மனுநீதி நாள் முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 84 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.