பெரம்பலூரில் வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.;

Update: 2024-02-14 10:40 GMT


தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த 3ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வருவாய் துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான, பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருத்த ஆணையினை வெளியிட வேண்டும், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லது அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடன் வெளியிட வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை விளக்கியும், அவற்றை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷமிட்டு. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர்கள் கதிர், சத்யமூர்த்தி, இளங்கோவன், துரைராஜ் , மாவட்ட இணைச்செயலாளர்கள் புகழேந்தி பெருமாள், ராமலிங்கம், பார்த்திபன்,சங்கீதா மத்திய செயற்குழு உறுப்பினர் கபிலன், மகளிர் அணி செயலாளர் தேன்மொழி, சட்ட ஆலோசகர் சிவா, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் குமரி ஆனந்தன் உள்ளிட்ட சங்கத்தின் மாநில, மாவட்ட , வட்டார நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News