மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது!

கந்திலி அடுத்த தென்னமரத்து வட்டம் பகுதியில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-06-14 10:04 GMT

 பலி

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த தென்னமரத்து வட்டம் பகுதியில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் கைது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி தென்னை மரத்து வட்டம் பகுதியை சேர்ந்த ராமன் வயது 32 இவரது மனைவி சூர்யா வயது 27 இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது இவர்கள் சென்னையில் பணிபுரி கடை நடத்தி வருகின்றனர் ராமன் மற்றும் அவரது மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் ராமன் இவருக்கு சொந்த ஊரான தென்னை மரத்து வட்டம் பகுதிக்கு சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தோடு வந்துள்ளனர் மீண்டும் ராமனுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மது போதையில் அவரது மனைவி சூர்யாவை கழுத்தை நெரித்து உள்ளார் சூர்யா மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

அவரது உறவினர்கள் சூர்யாவை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இன் நிலையில் சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்துள்ளார். இதைக் குறித்து கந்திலி காவல்துறையினர் ராமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News