மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், சாந்தநாதபுரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றில் திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-04-21 17:12 GMT
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சாந்தநாதபுரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட 3 மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பாண்டி என்ற 20 வயது நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் .இலுப்பூர் சாந்தனாதபுரத்தில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு அனுப்பி வைத்த இலுப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத்குமார், மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.