குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம் அருகே குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
Update: 2024-03-19 06:08 GMT
தற்கொலை
விழுப்புரம் அருகே குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் ஏசுதாசன்(49) இவர், கடந்த 17ம் தேதி, தனது மனைவி சுதாவிடம், குடும்ப பிரச்னையால், வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். பிறகு மனவருத்தத்தில் இருந்த ஏசுதாசன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.