கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு - டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார்  

Update: 2023-12-13 02:28 GMT
புகார் அளித்த பெண்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், பல பெண்களுடன் ஆபாச உரையாடல், நிர்வாண படங்களுடன் பெண் ஒருவர் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ஆர்த்தி (30), இவருக்கும் தஞ்சாவூர் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த விவேக்ராஜ் என்பவருக்கும் கடந்த ஜூன்.6ம் தேதி திருமணம் நடந்துள்ளது. விவேக்ராஜ் வங்கி நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, சென்னையில் விவேக்ராஜின் அக்கா வீட்டிற்கு சென்று திரும்பிய போது, அவரது மொபைலில் உள்ள அவரது அக்கா வீட்டில் எடுத்த போட்டோக்களை அனுப்ப ஆர்த்தி எடுத்துள்ளார். அப்போது, விவேக்ராஜ் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள், நிர்வாணமான பல பெண்களுடன் வாட்ஸ் அப்பில் பேசும்போது எடுத்த ஸ்கீர்ன் சாட் ஆகியவற்றை பார்த்து ஆர்த்தி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விவேக்ராஜிடம், ஆர்த்தி கேட்டுள்ளார்.

அப்போது, "வெளியில் கூறினால் தொலைத்துவிடுவேன்" என விவேக்ராஜ் மிரட்டியுள்ளார். அவரது பெற்றோர்களும் அச்சுறுத்தியுள்ளனர். ஒருமுறை கர்ப்பிணியான ஆர்த்தியை, விவேக்ராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் ஆர்த்தியின் கரு சிதைந்தது. இது தொடர்பாக ஆர்த்தி கடந்த மாதம் 27 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரது அறிவுறுத்தலின் பேரில், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் முறையாக விசாரிக்கவில்லை.  மீண்டும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்ட பிறகு, மகளிர் காவல்துறையினர் ஏனோதானோவென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.   மேலும், அவர் கொடுத்த ஆதாரங்களை கொண்டு வழக்கு பதிவு செய்யாமல், குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில்  மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.   இதனால் மனமுடைந்த ஆர்த்தி  தஞ்சாவூர் டி.ஐ.ஜி., அலுவலகத்தில், தனது வழக்குரைஞர் ஜீவக்குமார் உடன் வந்து, விவேக்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அப்போது, உமர்முத்தார், சுந்தரி, கதிர்வேல், பைசல், இளவரசி உடனிருந்தனர்.

Tags:    

Similar News