பாபநாசம் வழியாக ஐதராபாத்- மதுரை சிறப்பு விரைவு ரயில் இயக்கம்
ஐதராபாத் - மதுரை புதிய சிறப்பு விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் வரும் 8ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
ஐதராபாத்திலிருந்து மதுரைக்கு புதிய சிறப்பு விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் 8ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது .வருகின்ற ஏப்ரல் 8 .4.2024 முதல் ஐதராபாத் காச்சிகுடாவில் இருந்து மதுரைக்கு ஒரு புதிய சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு விரைவு ரயில் வண்டி ஒவ்வொரு புதன்கிழமை காலை 11.55 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு திருச்சி தஞ்சை பாபநாசம் கும்பகோணம் மயிலாடுதுறை விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி தர்மாவரம் அனந்தபூர் வழியாக காச்சிகுடா ஐதராபாத் சென்று சேரும் இந்த சிறப்பு விரைவு ரயில் வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் மேற்படி ரயில் வண்டிக்கு நிறுத்தம் வழங்கிய தென்னக ரயில்வே தலைமை போக்குவரத்து மேலாளர் முதன்மை இயக்க மேலாளர் திருச்சி கோட்ட மேலாளர் முதுநிலை வணிக மேலாளர் மற்றும் தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினருக்கு பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மதுரையிலிருந்து காச்சிகுடா பாபநாசம் ரயில் நிலையத்தை வந்தடையும் நேரம் மதியம் 3.38 மணி ஆகும் காச்சி குடாவில் இருந்து மதுரை ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தை வந்தடையும் நேரம் இரவு 7.30 மணி ஆகும் இந்த புதிய வண்டி ரயில் சேவையை ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இந்த தகவலினை திருச்சிராப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன் தெரிவித்துள்ளார்.