தேர்தல் அரசியலில் தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை- துரை வைகோ

தேர்தல் அரசியலில் தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பமில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார்.

Update: 2024-02-20 16:18 GMT

தேர்தல் அரசியலில் தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பமில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார். 

தேர்தல் அரசியலில் தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பமில்லை எனவும், தேர்தலில் தான் நிற்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக நிதி வசூலிக்கும் நிகழ்வில் பங்கேற்க மதுரை வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். "நாடாளுமன்ற தேர்தல் நோக்கில் தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் இல்லை. தமிழகத்தில் சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கிலேயே தான் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இரண்டு லோக்சபா சீட், ஒரு ராஜ்யசபா சீட் கேட்டுள்ளோம். நிச்சயம் இந்தியா கூட்டணி வெல்லும். தேர்தலில் நான் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு சிறந்த வேட்பாளரை நிறுத்துவோம்.

எனக்கு தனிப்பட்ட முறையில் தேர்தல் அரசியலில் விருப்பமில்லை. நேரடி அரசியலில் எனக்கு எல்லாமே புதிதாக இருக்கிறது. இருந்தாலும் நான் ஒரு முடிவெடுத்து அரசியலுக்கு வந்து விட்டேன். இயக்க தோழர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்" என கூறினார்

Tags:    

Similar News