முதலவர் உத்தரவிட்டதால் அணையை ஆய்வு செய்ய வந்தேன்:சந்தீப் சக்சேனா

முதலமைச்சர் உத்தரவிட்டதால் அணையை ஆய்வு செய்ய வந்தேன் என சந்தீப் சக்சேனா விளக்கம் அழைத்துள்ளார்.

Update: 2024-02-08 12:14 GMT

கூடுதல் தலைமை செயலாளர் 

முதலமைச்சர் உத்தரவிட்டதால் அணையை ஆய்வு செய்ய வந்தேன்- சந்தீப் சக்சேனா விளக்கம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே,கதவனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த கதவணையில் அதிகபட்சம் ஒரு டி.எம்.சி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் நீர் நிரம்பி உள்ளது. அதேசமயம் கோடைகாலமும் துவங்கியுள்ளது. கடந்த காலங்களில் நீர் பற்றாக்குறையால் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது அனைவருக்கும் தெரியும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், அது போன்று ஏதேனும் சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளதா? இதனை காரணமாக வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வாய்ப்புள்ளதா? என அரசின் சார்பில் கருதி இருக்கக்கூடும்.

இதனால், இன்று தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மாயனூர் கதவணையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் வந்தார். ஆய்வின் முடிவில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்து,முதலமைச்சர் உத்தரவிட்டதால், அணையை ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்தார். அணை தொடர்பான பல்வேறு குறைகள் குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News