தண்ணீர் தொட்டி வைக்கணும்...!
வையப்பமலை பஸ் நிறுத்தத்தில் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Update: 2024-02-07 12:03 GMT
மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை பஸ்நிறுத்தத்திற்கு தினமும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர். இதுவரையில் தண்ணீர் தொட்டி வைக்கப்படவில்லை. தற்சமயம், வெயில் காலம் துவங்கியுள்ளதால் நாளுக்குநாள் வெயில் வாட்டி வதைக்கின்றது. எனவே, இங்கு பஸ்ஸிற்காக வருகின்ற மக்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து தாகம் எடுத்து மிகவும் சிரமப்படுகின்றனர். ஒருசிலர் மயக்க நிலைக்குகூட சென்று விடுகின்றனர். வேறுவழியிலாமல் மளிகை கடைகளில் விற்கும் மினரல் வாட்டர்களை அதிக காசு கொடுத்து வாங்கி குடித்து வருகின்றனர். எனவே, பஸ்நிறுத்தத்தில் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.