வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய ஐஏஎஸ் அதிகாரி
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். ;
By : King 24x7 Website
Update: 2023-12-31 17:03 GMT
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
திருச்செங்கோடைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஐஏஎஸ் அதிகாரியான இவர் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். தூத்துக்குடி வெள்ளம் குறித்து அறிந்த அவர் அவரது நண்பர் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் மூலம் தூத்துக்குடி மக்களுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். இதில், உணவு, மளிகை பொருட்கள், பாய், போர்வை,உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு நல ஒருங்கிணைப்பாளர் துரைபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினர் இணைந்து தூத்துக்குடி நகர், புறநகர், தாமிரபணி கரையோர கிராமங்களில் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர்.