இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேகம் விழா!

பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் இடைய கருப்பர், பட்டவன் பாப்பாத்தி அம்மன் கோவில்வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2024-02-20 09:03 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இ.இடையபட்டியில் அமைந்துள்ள இடைய கருப்பர்,பட்டவன் பாப்பாத்தி அம்மன் கோவில்வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து சாந்தி,ரக்ஷாபந்தனம்,பூர்ணா குதி,உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.அதனைத்தொடர்ந்து முதலாம், இரண்டாம்,மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

பல்வேறு புனிதத் தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் பல்வேறு கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்டது.இவ்வாறு பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை மங்கல இசை முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்துவந்து கோவிலை வலம் வந்தனர்.கருடபகவான் கோவில் விமானத்தை சுற்றி வர பூஜிக்கப்பட்ட புனிதநீர் விமானத்தில் ஊற்றப்பட்டது.

மேலும் பரிவார தெய்வங்களான இடையகருப்பர்,பெருமாள் கருப்பர்,நைனா கருப்பர்,உராளி கருப்பர்,பட்டவன் சுவாமி, பாப்பாத்தி அம்மன்,நல்லழகி அம்மன்,சாவக்காரன்சின்னையா சுவாமி,செம்முனீஸ்வரர்,ஆண்டிச்சாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இடைய கருப்பர் கோவில் ஆலய பங்காளிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.கும்பாபிஷேக வர்ணையை தமிழ் வளர்ச்சி ஆர்வலரும் தமிழாசிரியருமான சி.சு.முருகேசன் செய்திருந்தார்.இந்நிகழ்வில் இடையாத்தூர்,இடையபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News