தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டு ஐ ஜே கே வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம்
கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு ஐ ஜே கே வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டு ஐ ஜே கே வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி, தோகைமலை ஒன்றிய பகுதியில் இன்று பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ ஜே கே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆர்டி மலை, காவல்காரன்பட்டி, மற்றும் கல்லடை பகுதிகளில் கூடியிருந்த பொது மக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் மேற்கொண்ட திட்டங்கள் குறித்தும், அதில் குறிப்பாக ரயில்வே பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற கோரிக்கை வைத்துள்ளதையும், தனது சொந்த நிதியில் தொகுதிக்கு 5 மாணவர்கள் என மொத்தம் வருடத்திற்கு 30 மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி தான் அளித்து வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் தனது தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து, புத்தகமாக அச்சடித்து பொதுமக்களிடம் வழங்கி, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது ஐ ஜே கே நிறுவன தலைவர் ரவி பச்சமுத்து, கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ்கன்னா, பிஜேபி மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் தோகைமலை ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டு தாமரை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.