இளங்கர்குடி ஸ்ரீ மகா செல்வ காளியம்மன் ஆலய திருவிழா
பாபநாசம் அருகே இளங்கர்குடி ஸ்ரீ மகா செல்வ காளியம்மன் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
Update: 2024-05-19 13:36 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இளங்கார்குடிஅம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ மகா செல்வா காளியம்மன் ஆலயத்தின் திருவிழாவில்கடந்த 12ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காவிரி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் கரகம், அக்னி கொப்பரை அலகுகாவடி, காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தப்பாட்டக் குழுவினரின் இன்னிசையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராமவாசிகள் செய்திருந்தனர்.