சட்டவிரோத மணல் திருட்டு - இருவர் கைது, வாகனங்கள் பறிமுதல்

Update: 2023-11-07 03:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார். இவர் கிராம உதவியாளர் தர்மராஜனுடன் மணல் திருட்டு சம்பந்தமாக காஞ்சிரங்கால் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காஞ்சிரங்கால் கண்மாய் பகுதியில் எந்தவிதமான அரசு அனுமதியும் இன்றி திருட்டுத்தனமாக ஜேசிபியின உதவியுடன் மணலை ட்ராக்டரில் ஏற்றுக் கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது டிராக்டர் ஓட்டுநர் அதே பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் என்பவரது மகன் கணேசன் என்பதும், ஜேசிபி ஓட்டுநர் இளையான்குடி அருகே கணபதி புதுக்குளத்தை சேர்ந்த சுகுமார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவரையும், கடத்தலுக்கு பயன்பட்ட ஜேசிபி, மற்றும் டிராக்டரை சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News