சேதமடைந்த தரைப்பாலம் உடனே சீரமைப்பு
செந்தில்குமார் எம்எல்ஏ முயற்சியால் சேதமடைந்த தரைப்பாலம் உடனே சீரமைப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-21 08:09 GMT
செந்தில்குமார் எம்எல்ஏ முயற்சியால் சேதமடைந்த தரைப்பாலம் உடனே சீரமைப்பு
பழநி அருகே பச்சையாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலம் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ முயற்சியால் உடனடியாக சீரமைக்கப்பட்டது. பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இடைவிடாது மழை பெய்தது. இதனால் பழநி அருகே பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பழநி அருகே பெருமாள்புதூர் கிராமத்தில் மேம்பால பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் அதிகாரிகளை தொடர்பு கொண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். இதன்படி ஒரே நாளில் பழநி ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் சீரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.