தகாத உறவு; ஒருவர் கைது!
அன்னவாசல் அருகே தகாத உறவு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2023-12-19 05:28 GMT
அன்னவாசல் அருகே தகாத உறவு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்னவாசல் அருகே உள்ள உருவம் பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மகனுக்கும் புத்தூரை சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகளுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்தையாவுக்கும், பழனியப்பனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பழனியப்பன் முத்தையாவை தாக்கியதில் முத்தையா காயமடைந்தார். இது குறித்து முத்தையா அன்னாவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் அன்னவாசல் காவல் துறையினர் பழனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.