திண்டுக்கல் அருகே அகதிகள் முகாமில் சாக்பீஸ் தயாரிக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகதிகள் முகாமில் சாக்பீஸ் தயாரிக்கும் பணியை குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள்.

Update: 2024-06-28 14:08 GMT

சாக்பீஸ் தயாரிக்கும் பணி

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகதிகள் முகாமில் சாக்பீஸ் தயாரிக்கும் பணியை குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு பத்துக்கும் மேற்பட்டோர் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான சாக்பீஸ்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

மூன்று வகையான அட்டைப் பெட்டிகளில் 100, 120, 140 என்ற எண்ணிக்கை கொண்ட சாக்பீஸ் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றனர். இதன் விலை 15 முதல் 19 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Tags:    

Similar News