எருமப்பட்டி பேரூராட்சியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் பணிகள்
எருமப்பட்டி பேரூராட்சியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் பணிகளை இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்;
எருமப்பட்டி பேரூராட்சியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் பணிகளை இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார்
எருமப்பட்டி பேரூராட்சி கைகாட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட பூமிபூஜை மற்றும் எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்நிலை மேல்நிலைப் தொட்டி கட்ட பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலு (எ) பாலசுப்பிரமணியம், பேரூராட்சி தலைவரும் திமுக பேரூர் கழகச் செயலாளருமான பழனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இராஜேஸ்குமார் கலந்து கொண்டு ரூ. 70 லட்சம் மதிப்பிலான பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, பேரூராட்சி செயல் அலுவலர் வசந்தா, மாவட்ட பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ஜவகர், இளநிலை பொறியாளர் சரவணன் எருமப்பட்டி துணைத் தலைவர் ரவி, கட்டிட ஒப்பந்ததாரர் பழனியப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்டத் துணை இளைஞரணி அமைப்பாளர் கலைவாணன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் விக்டோரி செந்தில், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் அறிவழகன், சதீஷ், கவி, பிரவீன், அருண், பேராசிரியர் ராஜ்குமார், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.