காஞ்சிபுரத்தில் எலுமிச்சை கிலோ ரூ.40 உயர்வு !
ஆந்திராவில் இருந்து வரத்து குறைவு எலுமிச்சை கிலோ ரூ.40 உயர்வு என தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-28 12:09 GMT
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழம், காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. காஞ்சிபுரம் சந்தையில் கடந்த வாரம் எலுமிச்சை கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் தற்போது, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எலுமிச்சை பழம் வியாபாரி கே.கபார் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில்இருந்து அதிகளவு எலுமிச்சை பழம், வெயில் அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சில நாட்களாக வெயில் அதிகரித்துள்ளதால், உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை பழச்சாறை வெளியில் நடமாடுவோர் பருகுவதால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ஆந்திராவில் இருந்து எலுமிச்சை வரத்து குறைந்துள்ளதால், கடந்த மாதம் கிலோ 120 ரூபாய்க்கு விற்ற எலுமிச்சை பழம், தற்போது, கிலோ 40 ரூபாய் உயர்ந்து, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.