பாலின வள மையம் திறப்பு விழா !
கன்னியாகுமரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வானவில் பாலின வளமையம் அமைத்து இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-29 10:11 GMT
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வானவில் பாலின வளமையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், - பெண்களின் பாதுகாப்பினை வலுசேர்க்கும் வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் வானவில் வள மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. என பேசினார்கள். அதனைத் தொடர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். மேலும் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு பதாகையினை அலுவலகத்தில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பீபீஜான், மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் அனுஷியா தேவி, உதவி திட்ட அலுவலர்கள் ஞான வளர்மதி, கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.