பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
பெரும்பாலை மற்றும் ஏரியூர் பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம்
Update: 2024-04-10 02:21 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலை மற்றும் ஏரியூர் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேசிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் தனது மனைவி சௌமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர் பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்களுக்காக தொடர்ந்து ஜாதி மதங்களைக் கடந்து போராடி வருகிறது. மக்களுக்கான நல திட்டங்கள் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய திட்டமாக காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது எனவே இந்த நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து சௌமியா அன்புமணியை வெற்றி பெற செய்தால் காவேரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுவாமி அன்புமணி மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி உட்பட பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.