பெரம்பலூரில் பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் கூட்டம்

பெரம்பலூரில் பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-20 16:04 GMT

கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கலந்து கொண்டவர்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து அரசு, அரசு ஆதிதிராவிடர் நல உயர் மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள், தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த என்னென்ன முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பெற சுற்றுப்புற சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுப்புற சூழல் சரியாகவும்,

சுகாதாரமாகவும் இல்லாமல் இருந்தால் கல்வி கற்பதற்கு ஏற்ற நிலை இருக்காது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி குழந்தைகள் நடந்து செல்வதற்கும் இடையூறு இல்லாத வகையிலும், விஷ ஜந்துக்கள் ஏதும் தங்காமல் இருக்கும் வகையிலும் பள்ளி கட்டிடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் மிக விரைவில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் தொடக்க நிலை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாதுரை, முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், முத்துக்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர் மற்றும் த ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News