மகனை கண்டித்ததில், எதிரிகள் தங்களை திட்டியதாக கருதி பெண்ணை தாக்கிய சம்பவம்

தனது மகனை கண்டித்து திட்டியதை, எதிரிகள் தங்களை தான் திட்டியதாக கருதி பெண்ணை தாக்கிய சம்பவம். இருதரப்பினர் அளித்த புகாரில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-02-03 08:59 GMT

காவல்துறையினர் வழக்கு பதிவு 

தனது மகனை கண்டித்து திட்டியதை, எதிரிகள் தங்களை தான் திட்டியதாக கருதி பெண்ணை தாக்கிய சம்பவம். இருதரப்பினர் அளித்த புகாரில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மல்லிகா வயது 50. இவரது மகன் சிறுவன் ரவிவர்மாவுடன் ஜனவரி 30 ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் அவர்கள் வீட்டின் முன் அமர்ந்து கொண்டு இருந்தனர். அப்போது மகன் செய்த குறும்புத்தனத்தை கண்டித்து, மகனை திட்டி உள்ளார் மல்லிகா. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அருள்முருகன், செல்வி, கௌசல்யா, ஆறுமுகம் ஆகிய நான்கு பேரும் அப்பகுதியை கடந்து சென்ற போது, தங்களை தான் மல்லிகா திட்டுகிறார் என நினைத்து, மல்லிகாவை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் மல்லிகா அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதே சம்பவத்தில் ஆறுமுகம் அளித்த புகாரில், கோவிந்தராஜ், ரவிவர்மன், மல்லிகா ஆகிய மூன்று பேர் மீதும் தன்னிச்சையாக வந்து தகராறு செய்து, கைகளால் தாக்கியதாக புகார் செய்தார். இந்த புகாரில், மூன்று பேர் மீதும் அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News