பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள் !

சேலத்தில் சேவகன் அறக்கட்டளை சார்பில் பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள் தண்ணீர் நிரப்பி மரங்களில் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2024-03-05 06:38 GMT

பறவைகளின் தாகம் தீர்க்கும் இளைஞர்கள்

சேலத்தில் கடந்த 2 மாதங்களாக மழை இல்லாமல் வறட்சியாக உள்ளது. எனவே பறவைகளின் தாகத்தை தீர்க்க சேவகன் அறக்கட்டளையினர் முடிவு செய்தனர். அதன்படி பறவைகள் அதிகம் வாழும் பகுதிகளை கண்டறிந்து குடுவையில் தண்ணீர் நிரப்பி மரங்களில் வைக்கும் பணியில் சேவகன் அறக்கட்டளையினர் ஈடுபட்டனர். அந்த வகையில் இதுவரை 80 இடங்களில் கடந்த 2 மாதங்களாக பறவைகளுக்கு தண்ணீர் வைத்துள்ளனர். இந்த பணியில் அறக்கட்டளை நிறுவனர் பிரதீப், தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன், செயலாளர் பூபதி, ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்பட 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக சேவகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், இயற்கையை பாதுகாக்கும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் கோடை காலத்தில் பறவைகளின் தாகம் தீர்க்கும் வகையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து குடுவைகளில் தண்ணீர் நிரப்பி மரங்களில் வைத்து வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News