உங்களை தேடி, உங்கள் ஊரில்: மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு மேற்க்கொண்டார் 

Update: 2024-02-01 16:54 GMT

குழந்தைகளுடன் சாப்பிடும் ஆட்சியர்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவனை வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் கீழ் நாகை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்,  கள ஆய்வு மேற்க்கொண்டார்.

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடலுக்குடன் நிரவு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (4-வது புதன்கிழமை) வட்டம் அளவில் தங்கி, முதல் நான் காலை 9.00 மணி முதல் மறுநாள் காலை 9.00 வரையில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டம். திருக்குவளை வட்டத்தில் நாகை காலக்டர் ஜானிடாம் வர்கீஸ  அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கள ஆய்வு மேற்க்கொண்டார். 

திருக்குவளை வட்டம் நீர்முளை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  திருக்குவளையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் ,  திருக்குவளை கால்நடை மருத்துவமனை, திருக்குவளையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையம், அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப்பள்ளி, திருவாய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் , திருவாய்மூர் நியாயவிலைக் கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட நாகை கலெக்டர் ஜான வர்கீஸ்  திருக்குவளை வட்டாட்சியர் அ லுவலகத்தில் பொது மக்களிடம் 300 கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று அதிகாலை   திருக்குவளை வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் வட்ட செயல்முறை .கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு பொருள்களின் விபரங்கள் குறித்தும், இருப்பு குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் திருக்குவளை கிளை நூலகத்தில் வாசகர்கள் வருகை, புத்தகங்களின் போதிய இருப்பு மற்றும் பதிவடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து திருக்குவளை பேருந்து நிலையத்தில் தூய்மைப்பணிகள் குறித்தும், மின்சார வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். திருவாய்மூர் ஏ.கே.ஜி நகரில் கள ஆய்வு செய்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறைகளின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்கள் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியினையும் மற்றும் தெருவிளக்கு வசதிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம்

கேட்டறிந்தார். மேலும் திருக்குவளை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு அப்பகுதியில் குடிநீர் வசதிகள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றனவா என்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள மாணவ விடுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் நல்ல முறையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார். மாணவ விடுதிகளில் உள்ள உணவுக்கூடம் மற்றும் கழிப்பறைகளை ஆய்வு செய்தார் திருவாய்மூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் வருகை, பதிவேடுகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார் பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு உட்கொண்டார்.

திருக்குவளை பால் உற்ப்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்க்கொண்டு பால் கொள்முதல் செய்வதை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்ரஞ்ஜீத்சிங, உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன்,

திட்ட இயக்குநாமகளிர் திட்டம்) முருகேசன், திருக்குவளை வட்டாட்சியர்,  சுதர்சன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், ஆரோக்கிய மேரி, திருக்குவளை ஊராட்சிமன்ற தலைவர் பழனியப்பன், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.                   

Tags:    

Similar News