செய்யூரில் மின் விளக்கு இல்லாத கழிப்பறைகளால் அலுவலர்கள் அவதி

செய்யூரில் மின் விளக்கு இல்லாத கழிப்பறைகளால் அலுவலர்கள் அவதிக்குள்ளகி உள்ளனர்.

Update: 2024-04-16 14:04 GMT

மின்விளக்கு இல்லாத கழிப்பறை 

செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு, தினமும் 100க்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை விண்ணப்பித்தல், நில அளவைக்கு பதிவு செய்தல், பட்டா பெயர் மாற்றம் என, பல்வேறு தேவைக்காக வந்து செல்கின்றனர். தாசில்தார் அலுவலகத்திற்கு வருவோரின் பயன்பாட்டிற்காக,

கடந்தாண்டு பொது கழிப்றை அமைக்கப்பட்டது. வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, நிலை கண்காணிப்பு படையினர், பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழு உள்ளிட்டவை, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தாசில்தார் அலுவலக கழிப்பறையில் உள்ள மின்விளக்கு பழுதடைந்து உள்ளதால், இரவு நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து செல்லும் தேர்தல் அதிகாரிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பொது கழிப்பறையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News