பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்
திருச்சி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரணடைந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 10:38 GMT
பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த களிக்க முடியான்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா (45). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கும் துறையூர் அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த உறவினர் பழனிச்சாமி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில வருடங்களாக மல்லிகாவும் பழனிச்சாமியும் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனிசாமிக்கு சொந்தமான பூர்வீக இடத்தை விற்பனை செய்து அதற்காக தான் வாங்கிய முன் பணம் ரூபாய் 5 லட்சத்தை மல்லிகாவிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும், தற்பொழுது பணத்தை கேட்கும் போது கள்ளக்காதலியான மல்லிகா பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழனிச்சாமி மல்லிகாவிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிகிறது. மேலும் பழனிச்சாமி துறையூர் காவல் நிலையத்தில் இன்று சரண்டைந்தார். இது பற்றி துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தது மல்லிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பழனிச்சாமியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.