தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 422-வழக்குகளுக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 422-வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படியும். டிசம்பர் 9ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் தலைமையில் குன்னம், வேப்பந்தட்டை உட்பட 7 அமர்வுகள் அமைக்கப்பட்டு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மேலும் மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல மாவட்ட நீதிபதி தனசேகரன், , கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி. மகாலெட்சுமி ஒரு அமர்வாகவும். அண்ணாமலை, சார்பு நீதிபதி மற்றும் இராஜமகேஸ்வர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஒரு அமர்வாகவும், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் . சுப்புலெட்சுமி, சங்கிதா சேகர் மற்றும் குன்னம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா மற்றும் வேப்பந்தட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் பர்வதராஜ் ஆறுமுகம் ஆகியோர் தனி தனி அமர்வுகளாக அமைக்கப்பட்டு வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. இதில் நீண்ட நாட்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், மோட்டர் வாகன விபத்து காப்பீட்டு வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தபட்ட குடும்பநல வழக்குகள். வங்கி வாராக்கடன் வழக்குகள்.. குற்றவியல் காசோலை மோசடி வழக்குகள் உட்பட 1500-க்கும் மேற்பட்ட வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் 422-வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக 85,40,000 உட்பட மொத்தம் 1,37,66,150-க்கான உத்தரவு வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய சந்திரசேகர் செய்திருந்தார்.