வாணியம்பாடியில் தோல் கழிவுநீரால் நுரைபொங்கி ஓடும் பாலாறு!

வாணியம்பாடியில் தோல் கழிவுநீரால் நுரைபொங்கி ஓடும் பாலாறு! செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்! பாலாற்றை கண்டுகொள்ளாத அதிகாரிகாரிகள்?

Update: 2024-02-25 09:11 GMT

நுரைபொங்கி ஓடும் பாலாறு

திருப்பத்தூர் மாவட்டம் தோல் கழிவுநீரால் நுரைபொங்கி ஓடும் பாலாறு, செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்பாலாற்றை கண்டுகொள்ளாத அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் தோல் கழிவுநீரை சுத்திகரிக்காமல், தோல் தொழிற்சாலை நிர்வாகம் பாலாற்றில் திறந்து விடப்படுவதால், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ் பாலாறு துர்நாற்றத்துடன் நுரை பொங்கி ஓடுகிறது, மேலும் ஆற்றில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்ற நிலையில், பாலாற்றில் தோல் கழிவுநீரை விடக்கூடாது என சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் பலமுறை போராடியும், அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரையில் மாவட்ட நிர்வாகம் பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.. மேலும் பலதரப்பட்ட ஆய்வுகளின் கீழ் பாலாறு படுக்கைகளில் உள்ள நிலத்தடி நீர் குடிக்க கூடாத நிலையில் உள்ளதால், அதிகாரிகளும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாலாற்றை கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News