வேலூரில் 750 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2024-04-18 15:45 GMT

கண்காணிப்பு கேமரா பொருத்தம்

வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவ தற்காக மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்ட மன்ற தொகுதிகளில் 656 வாக்குச்சாவடி மையங்களில் 1,307 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 183 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகள் ஆகும். இங்கு வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் 183 நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளனர். அதைத்தவிர 567 வாக்குச் சாவடிகளில் சிறு, சிறு அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேர்தல்பிரிவு அதிகாரிகள், போலீசார் கண்டறிந்தனர்.

இந்த நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 750 வாக்குச்சாவடிகளில் வெப் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்பட பல் வேறு வாக்குச்சாவடிகளில் தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கேமராக்கள் பதிவாகும் காட்சிகள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்றும், கேமராக்கள் பொருத்தும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News