நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா

Update: 2024-07-16 12:07 GMT

பதவியேற்பு விழா

நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது

நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில கடந்த ஜுலை 8 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மாணவப் பேரவைத்; தேர்தல் நடைபெற்றது. 12-ஆம் தேதிபோட்டியாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் எடுத்து எண்ணப்பட்டது.

மாணவத் தலைவராக மாணவர் பிரிவு செல்வன். நர்வின் பதினோராம் வகுப்புரூபவ் மாணவியர் பிரிவு தலைவராக செல்வி. நந்தினி பதினோராம் வகுப்பு, மாணவர் முகமத்ரயான் ஒன்பதாம் வகுப்பு, மாணவி ராஜஸ்ரீ அவர்களும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். மேலும் ஒன்றாம்

வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் (ர்நயன டீழல)ரூபவ் (ர்நயன புசைட) தனித்தனியாக தேர்வு செய்யப்பட்டது.

“மேலும் Cultural Ministers, Food & Safety Ministers, Language Ministers, கிழேங்ளின்ஸ் Ministers, Discipline Ministers என அனைத்து பிரிவுகளிலும் மாணவ, மாணவியர் என தனித்தனியாக தேர்த்தெடுக்கப்பட்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் (திங்கள் கிழமை)15.07.2024 பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரமத்தி காவல் சரகத்தை சார்ந்த காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் அவர்களும், உதவி ஆய்வாளர் சரண்யா அவர்களும் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளைக் கூறினார்கள்.

சிறப்பு விருந்தினர் காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் பேசுகையில் “மாணவ, மாணவியர்கள் நாட்டுக்கும்,  நாட்டு மக்களுக்கும், சேவை செய்யும் சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், சட்டத்தை கடைபிடிக்க வேண்டும், அப்துல்கலாமைப் போல நல்ல உலகம் போற்றும் தலைவர்களாக உருவாக வேண்டும்” என்று வாழ்த்தினார். இவ்விழாவிற்கு பள்ளியின் செயலாளர் மற்றும்

பொருளாளர் தலைமையேற்று நடத்தினார்கள். பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் பேசும்போது “கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றோம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது பெருமையாக உள்ளது. மாணவரூபவ் மாணவியர்கள் நாட்டுப் பற்று மிக்கவர்களாக வளர வேண்டும். காவல்துறைரூபவ் இராணுவம்ரூபவ் விமானப்படை போன்றவற்றை தேர்வு செய்து சேவை செய்ய வேண்டும். நல்ல தலைவர்களாக வளர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

தேர்தலில் வெற்றி பெற்று பதவி பிரமாணம் உறுதிமொழி ஏற்று கொண்ட மாணவ, மாணவியர்களை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள், சகமாணவ, மாணவியர்கள் வாழத்துக் கூறி பாராட்டினார்கள்.தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற்றது. பின்னர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News