பண்ருட்டியில் சிமெண்ட் சாலை திறந்து வைப்பு

பண்ருட்டியில் சிமெண்ட் சாலை திறந்து வைக்கப்பட்டது.

Update: 2024-02-06 15:11 GMT

சிமெண்ட் சாலை திறப்பு

பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு அண்ணாமலை நகரில் நீண்ட நாள் கோரிக்கையான மண் சாலைகளை சிமெண்ட் சாலை அமைத்து தரமாறு அப்பகுதி மக்கள் பண்ருட்டி நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் KNMT 2023.2024 நிதி ஆண்டின் கீழ் மன் சாலைகளை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி திட்ட மதிப்பீடு தொகை ரூபாய் 19.25 லட்சத்தில் பணிகள் முடிவுற்று நிலையில் மக்களின் பயன்பாட்டுக்கு பண்ருட்டி நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. உடன் நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி. வார்டு செயலாளர் முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை,

வட்ட பிரதிநிதி தயாளன், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News